Thursday, 27 August 2015

பட்டினத்தார்

பட்டினத்தார் 


சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில்பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப்பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது.திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம்என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும்மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார்.

அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார்என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்துஇல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில்திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர்என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர்ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான்என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்துபெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வரஅனுப்பினார்.

அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டுவந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர்ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழைஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத்துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" எனஅதில் எழுதியிருப்பதைக் கண்டு, அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்"ஒப்படைத்து, "இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு" எனச் சொல்லிதுறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.

அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணிஅவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடையதமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு"தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டுபட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டுஅவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்றுசொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள்என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில்அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கைஎங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்தபட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடையதாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளைஅகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டுசிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப்பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்றுஎண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றிஎரிந்த காட்சியில் அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்தகணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்துதுறவியானவர். சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர்.அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.

சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:
  • கோயில் நான்மணி மாலை
  • திருக்கழுமலை முமணிக்கோவை
  • திருவிடைமருதூர் திருவந்தாதி
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.
எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்

உண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

திருவொற்றியூரில் சமாதி

தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது.“பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல்யாரும் துறக்கை அரிது” என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்பட்டினத்தார்.


யார் நாம் ! என்ற கேள்வியை கேட்காத மனிதர் இல்லை,கேட்டாலும் விடையும் இல்லைஆனால் நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் பிறந்துவளர்ந்துஆளாகி தன்னை அறிய துறவறம் போகின்றனர்துறவறம் சென்றவர்கள்மண்ணாசை,பெண்ணாசைபொருளாசை மூன்றையும் கொண்டவர்களாக இருந்தாலும்துறவறத்திற்கு பின்பு இவைகளின் நிலையாமையை உணர்ந்து அவைகளை துறக்கின்றனர்.எல்லோர்க்கும் பயன்பட நமக்கு சில கருத்துக்களை சொல்கின்றனர்அப்படிப்பட்டவைகளை நாம் பற்றி பிடித்துக்கொண்டு அவர்களின் வழியில் செல்ல நல்லோர்களின் அருளும்நாயகனின் தயவும் கிடைக்கும்.

பட்டினத்தாரின் பாடல்களில் இதோ ஒரு பாடல்..

பிறந்தன இறக்கும்இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும்பிரிந்தன புணரும்;
உவப்பன வெறுப்பாம்வெறுப்பன உவப்பாம்

பிறந்தன இறக்கும்இறந்தன பிறக்கும்.
உலகம் என்பது நிலையில்லாததுநாளுக்கு நாள் மாறிக்கொண்டேஇருப்பதுஅதில் வாழும் உயிர்களும் பரிணாமமாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சமநிலையை உண்டாக்கிக்கொண்டு வரும்எந்த உயிருக்கும்நித்தியத்துவம் என்பது இல்லைபிறக்கும் எல்லா உயிரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும்இந்த நியதியிலிருந்து எந்த உயிரும்தப்ப முடியாதுசரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர்முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லைஅப்படிப்பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்பமறுபடியும் ஜனன மெடுக்கும்இதுதான் முதற் பழமொழியின்பொருள்.

தோன்றின மறையும்மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை.காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான்.அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். (இஃதுசூரியனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும்பொருந்தும்

பெருத்தன சிறுக்கும்சிறுத்தன பேருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள்முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்துமுடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும்அந்தஅமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறைபூரணச் சந்திரனாக காட்சியளிகும்நிலவு தேய்வதும் வளர்வதும்இயற்கை நிகழ்வுகள். (இஃது சந்திரனுக்கு மட்டுமல்ல , எல்லாஉலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)

உணர்ந்தன மறக்கும்மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான்.எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது.சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றனஉணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும்அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

புணர்ந்தன பிரியும்பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது.அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும்இது ஒரு வட்டச் சுழற்சி.

உவப்பன வெறுப்பாம்வெறுப்பன உவப்பபாம்
விரும்பிப் போனால் விலகிப் போகும்விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது.பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.


மனம் உணருமாஉணர வேண்டும் !


பட்டினத்தார் வரலாறு முற்றிற்று ..

No comments:

Post a Comment